முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி: அவசரமாக நாடு திரும்பிய வில்லியம்சன்

புதன்கிழமை, 18 மே 2022      விளையாட்டு
Williamson-2022-05-18

முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி உள்ள நிலையில் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.

ஐதராபாத் அணி...

ஐ.பி.எல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கிறது. ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதம் இருக்கும் ஒரு போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

நாடு திரும்பினார்...

இத்தகைய முக்கியமான சூழ்நிலையில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பயோ பபுளை விடுத்து தற்போது சொந்த நாடான நியூசிலாந்திற்கு அவசரமாக திரும்பி உள்ளார். வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு விரைவில் 2வது குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் மனைவியின் பிரசவத்திற்காக வில்லியம்சன் தாயகம் திரும்பியுள்ளார். இந்த தகவலை ஐதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில் தற்போது 2-வது குழந்தை பிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து