எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கீவ், கார்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள், ரஷ்ய தாக்குதலில் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன. உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கவச வாகனங்களை அழித்திருப்பதாக அந்நாடு கூறியுள்ளது.
குண்டுமழை பொழியும் பகுதிகளில் இருந்து மக்களை உக்ரைன் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது. இதனிடையே, ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் பல்வேறு உதவிகளை செய்வதுடன், ரஷ்யா மீது எண்ணற்ற பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. தற்போது, உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி 87 நாட்களை கடந்துவிட்டன.
இதுகுறித்து பேசிய அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, கிழக்கு உக்ரைனின் டான்காஸ் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறினார். கிழக்கு பகுதியில் நாள்தோறும் சுமார் 100 உக்ரைன் ராணுவ வீரர்கள் வரை நாட்டு மக்களுக்காக தங்களது உயிரை தியாகம் செய்து வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


