முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகை உணர்வு எதுவும் இல்லை ; மேரிகோமை மன்னித்துவிட்டேன் : தங்கம் வென்ற நிகத் ஐரீன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      விளையாட்டு
Nikath-Irene 2022-05-24

Source: provided

மும்பை : மேரி கோம்மை மன்னித்துவிட்டதாக உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஐரீன் தெரிவித்துள்ளார்.

தங்கப் பதக்கம்... 

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்தியாவின் நிகத் ஜரீன் 52 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் நிகத் ஜரீன்.

மன்னித்துவிட்டேன்...

தங்க பதக்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு நாடு முழுவதிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மற்றும் பல்வேறு நேர்காணல்களிலும் அவர் பங்கேற்று வருகிறார். இதில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் உங்களை விமர்சித்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு நிகத் ஜரீன், “ முன்பு என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்காக நான் மேரி கோமை மன்னித்துவிட்டேன். அவர் மீது எந்த பகை உணர்வும் இல்லை. மேரி எவ்வாறு நாட்டை பெருமைப்படுத்தினாரோ நானும் அவ்வாறு பெருமைப்படுத்துவேன்” என்றார்.

வார்த்தை மோதல்... 

முன்னதாக ஒலிம்பிக்கிற்கான இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பிஎஃப்ஐ) -ன் தேர்வில் சார்புநிலை இருப்பதாக நிகத் குற்றம் சாட்டினார். பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த மேரி கோம் 51 கிலோ பிரிவில் எந்த சோதனையும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டார் எனவும் அவர் விமர்சித்தார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!