முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும் - சீனு ராமசாமி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      சினிமா
Vijay-Sethupathi 2022 06 19

Source: provided

யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இந்த வாரம் திரைக்கு வரவுள்ள இப்படத்தை Studio 9 சுரேஷ் வெளியிடுகிறார்.  இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குனர் சீனுராமசாமி, இந்த படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா - இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் இளையராஜா வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது. நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிகொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது. நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துக் கொடுத்தார். இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து