முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Draupadi-Murmu 2022-06-22

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க/ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு மத்திய அரசு இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இந்திய வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கு பழங்குடியின பிரிவை சேர்ந்தவர் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம், ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க அதன் விஜபி பாதுகாப்புக் குழுவை அனுப்புமாறு மத்திய ரிசரவ் போலீஸ் படைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஒடிசாவை தளமாகக் கொண்ட துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். மேலும், நாட்டின் முதல் குடிமகனாக அவர் பொறுப்பேற்கும் வரை கமாண்டோ பாதுகாப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து