முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'கோவோவாக்ஸ்' தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க பரிந்துரை

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      இந்தியா
Kovovaks 2022 05 25

Source: provided

புதுடெல்லி : 7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. 

சீரம் நிறுவனத்தின் 'கோவோவாக்ஸ்' கொரோனா தடுப்பூசியை 7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கக்கோரி அந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மார்ச் 16-ந் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. 

இந்தநிலையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் கொரோனா துறைசார் நிபுணர் குழு இதுகுறித்து ஆராய்ந்தது. அதன் அடிப்படையில், 7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'கோவோவாக்ஸ்' தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக இந்திய தலைமை மருத்து கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து