முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ‘பூ’ ராமு மறைவு

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
Ramu 2022-06-27

Source: provided

சென்னை : நாடகக் கலைஞரும், திரைப்பட உறுதுணை நடிகருமான ‘பூ’ ராமு நேற்று மாரடைப்பால் காலமானார்.

இயக்குநர் சசி இயக்கிய ‘பூ’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர், நாடகக் கலைஞர் ராமு. அந்தப் படத்தில் அவர் நடித்திருந்த ‘பேனாக்காரன்’ கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததால், அதன் பின்னர் ‘பூ’ ராமு என்று அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து. ‘நீர்ப்பறவை’, ‘தங்கமீன்கள்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட பல படங்களில் உறுதுணை நடிகராக ‘பூ’ ராமு நடித்துள்ளார்.

இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக திங்கள்கிழமை காலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டிவந்த நிலையில் திங்கள்கிழமை மாலையில் சிகிச்சைப் பலனின்றி ‘பூ’ ராமு காலமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து