முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா

புதன்கிழமை, 6 ஜூலை 2022      உலகம்
Singapore 2022-07-06

Source: provided

 சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்புக்கு (வயது 67) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்டு, பூஸ்டர் டோசும் போட்டுக் கொண்ட நிலையில்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின்(53) மற்றும் கலாசாரம், சமூகம், இளைஞர்கள் நல அமைச்சர் டாங்குக்கும் (52) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த 28 நாட்களில் சிங்கப்பூரில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து