முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து கிளப் தீ விபத்தில் 13 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      உலகம்
Thailand-Club-Fire-2022 08

தாய்லாந்தில் கிளப் ஒன்றில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள சாட்டாஹிப் மாவட்டத்தில் மவுன்டெய்ட் கிளப் உள்ளது. இந்த கிளப்பில் நேற்று அதிகாலை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர். 40-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டினர் யாரும் இந்த விபத்தில் இறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல மணி நேரப் போராட்டங்களுக்கு பிறகு மீட்புப் படையினர் தீயை அனைத்தனர். கிளப்பில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், கிளப்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் தீயினால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து இரவு கிளப்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில், இந்த கோர விபத்து நடந்துள்ளது.

தாய்லாந்தில் 2009-ஆம் ஆண்டு சாண்டிகா கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 67 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து