முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக. 14 வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து