முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகஸ்தியர் மலை : முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் மகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகஸ்தியர் மலை அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இந்த மலையில் அமர்ந்து கொண்டுதான் அகஸ்தியர் தமிழ் வளர்த்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இந்த மலையின் உச்சியின் அகஸ்தியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வாகனங்கள் செல்லமுடியாதபடி அடர் வனப்பகுதியாக காணப்படுகிறது.

 இதனால் பக்தர்கள் அகஸ்தியர் கோவிலுக்கு நடைபயணமாக செல்வார்கள். அதன்படி 2 நாட்கள் இரவு, 3 நாட்கள் பகல் என கடுமையான நடைபயணம் மூலம் நெல்லை மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்த அருவி, பேயாரு ஆகியவற்றை கடந்து பொதிகை மலைக்கு செல்வார்கள். கடந்த 1995-ம் ஆண்டு வரை பக்தர்கள் சென்று வந்த நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2002-ம் ஆண்டுக்கு பின் இவ்வழியாக செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். 

இதனால் தற்போது பக்தர்கள் மலையின் மறுபுறம் உள்ள திருவனந்தபுரம் வழியாக சென்று வருகிறார்கள். பொதிகை மலையில் 6 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. மேலும் பொதிகை மலையில் 121 வகை உயிரினங்கள், 157 வகை ஊர்வன விலங்குள் மற்றும் அறிய வகை தாவரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு பெற்ற அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில் 5-வது காப்பகமாக அகஸ்தியர் மலையை அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

உலக யானைகள் நாளில், தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.  கானுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து