முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: தலிபான் மதகுரு பலி

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      உலகம்
Afghanistan 2022 08 13

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மத பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் மூத்த தலிபான் மதகுருவான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பங்கேற்று உரையாற்றினார். 

அப்போது தன்னுடைய செயற்கை காலில் வெடிகுண்டுகளை மறைத்து கொண்டு வந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானிக்கு அருகில் சென்று வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

இதில் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். தலிபான் மதகுருவின் கொலைக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். 

ஷேக் இதற்கு முன் 2 கொலை முயற்சிகளில் உயிர் தப்பியவர் ஆவார். கடந்த 2020-ம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதும், அந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து