எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்ககதில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கும் படம் சீதா ராமம். வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப் படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ‘சீதா ராமம்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் படக்குழுவினர் வெற்றி விழாவைக் கொண்டாடினர். இவ்விழாவில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், படத்தில் இயக்குநர் ஹனு ராகவபுடி, கதாநாயகன் துல்கர் சல்மான், படத்தைத் தமிழில் வெளியிட்ட லைகா நிறுவனத்தின் தமிழகத் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம்.தமிழ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது துல்கர் சல்மான் பேசுகையில், வித்தியாசமான படைப்புகளுக்கு உங்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இயக்குநரிடம் கதை கேட்கும் போது, இப்போது கடிதம் எழுதும் பழக்கம் பெரியளவில் இல்லை என்பதால் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஏராளமானவர்கள் மீண்டும் கடிதம் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு தாளில் கடிதம் எழுதி, அதனை புகைப்படமாக எடுத்து, என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுகிறார்கள். இத்தகைய டிஜிட்டல் கடித வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


