Idhayam Matrimony

65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin----------2022-08-18

Source: provided

சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார். அதற்காக கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., இம்மாதம் 22 முதல் 26-ம் தேதி வரை கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக சபாநாயகர் மு.அப்பாவு கலந்துகொள்கிறார். சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் இம்மாநாட்டில் நடைபெறும் 'சோகாட்' கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

சபாநாயகர் மு.அப்பாவும், செயலாளர் கி.சீனிவாசனும் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, பின்பு ஹாலிபேக்ஸ் நகருக்கு சென்றடையவுள்ளார்.

சபாநாயகர் மு.அப்பாவும், செயலாளர் கி.சீனிவாசனும் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 1-9-2022 (வியாழக்கிழமை) இரவு 8.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ள சபாநாயகர் அப்பாவுவை நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து