முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் 10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு மக்கள் தொகையை அதிகரிக்க அதிபர் புதின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      உலகம்
Russia-1-2022-08-18

Source: provided

மாஸ்கோ: ரஷ்யாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசாகக் கிடைக்கும் என அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் மக்கள்தொகையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாக அதிபர் புதின் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு 13,500 பவுண்ட்(ரூ.13 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மிகப்பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கும் ரஷ்யா சமீப காலமாக மக்கள்தொகைப் பெருக்கத்தில் சரிவை அடைந்துள்ளதால் அதிபர் புதின் இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், 10-வதாக பிறக்கும் குழைந்தைக்கு 1 வயது நிறைவடைந்த உடன் இந்தத் தொகை கிடைக்கும் என்றும் போரில் அல்லது அவசரநிலையில் குழந்தைகளில் யாரேனும் உயிரிழந்தாலும் பரிசு கிடைக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

1940 ஆம் ஆண்டு முதலே மக்கள்தொகையை அதிகரிக்கும் பொருட்டு ரஷ்யாவில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து