முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      ஆன்மிகம்
Perumal 2022--09-24

Source: provided

சென்னை : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் விசேஷமானது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும். இதையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் துளசி மாலை கொடுத்து வழிபாடு செய்தனர். 

சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான கோவிலில் குவியத் தொடங்கினர். அவர்கள் வரிசையில் நின்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.  மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டு சிறப்பு 4 கால பூஜை நடைபெற்றது.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், துளசி மாலை, தாமரை மாலை, சம்பங்கி மாலை ஆகியவற்றால் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா என்று பக்திபரவசத்துடன் கோஷம் எழுப்பியபடியே சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், யதோத்தகாரி பெருமாள் உள்ளிட்ட திவ்ய தேசங்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதே போல் மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து