முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தி பிறந்த நாளையொட்டி இன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மாவை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
Gandhi 2022-09-30

Source: provided

சென்னை : தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை, காந்தி உலக மையத்துடன் இணைந்து மகாத்மாவைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை இன்று காலை 10.00 மணிக்கு எழும்பூர் அருங்காட்சியம் தேசிய கலைக்கூடம்  தரைத்தளத்தில்  நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   

காந்தியடிகள் கைப்பட  எழுதிய கடிதம், டெலிகிராம், அவரது  நினைவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அரிய புகைப்படங்கள் அடங்கிய சிறப்புக் கண்காட்சி அருங்காட்சியக கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

 மேலும் தமிழகம் முழுவதும் இருந்து, 153 பள்ளி மாணவர்கள்  மகாத்மா காந்தியடிகள் போல வேடமணிந்து, அவரது பொன்மொழிப் பதாகைகளை ஏந்தி பங்கேற்கின்றனர்.  தேச பக்தி பாடல்களைப் பாடியும், நடன நிகழ்ச்சி மூலமும் காந்தியடிகளின் சிறப்பினை போற்றுகின்றனர்.   இந்நிகழ்ச்சியில் அரசு உயர்அலுவலர்கள், பல்துறை முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து