முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 3,947 பேருக்கு கொரோனா: இந்தியாவில் 4 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது தினசரி பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      இந்தியா
India-Corona 2022-07-23

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நேற்று 4 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு. புதிதாக 3,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 4 ஆயிரத்து 272-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 87 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 19 ஆயிரத்து 95 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 39 ஆயிரத்து 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 218கோடியே 52 லட்சத்து 16 ஆயிரத்து 710 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து