முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மேயர் உள்பட 18 பேர் பலி

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Maxico 2022-10-06

Source: provided

மெக்சிகோ: மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேயர் உட்பட 18 பேர் பலியாயினர். 

மெக்சிகோவின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலாபன் என்ற நகரில் சிட்டி ஹால் உள்ளது. இந்த கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.  அவர்கள் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் அந்த கட்டிடத்தின் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் அந்த கட்டிடத்தில் இருந்த பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.

மர்ம கும்பல் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் மெக்சிகோ மேயர் கான்ராடோ மெண்டோசா மற்றும் அவரது தந்தையும், முன்னாள் மேயருமான ஜுவான் மென்டோசா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் சில அரசு ஊழியர்களும் உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்தவர்கள் சிட்டி ஹால் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனால் அந்த பகுதி ரத்தக் காடாக காட்சி அளித்தது. அந்த கட்டிடத்தின் பல இடங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தது. இந்த சம்பவத்திற்கு லாஸ் டெக்வலிரோஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. ஆனால் இதனை மெக்சிகோ அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை. 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை மர்ம கும்பல் படமெடுத்து வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மெக்சிகோவில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு கும்பலை பிடிக்க அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேயர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து