முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக அறிவிப்பு: திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூபாய் 2.50 லட்சம் கோடி

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2022      ஆன்மிகம்
Tirupati 2022-11-08

Source: provided

திருப்பதி : திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலகப்புகழ் பெற்றது. தினந்தோறும் உலகமெங்கும் இருந்து இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டுச்செல்கிறார்கள். இங்கு மக்கள் காணிக்கைகளை குவிக்கிறார்கள். உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2.50 லட்சம் கோடி (சுமார் 30 பில்லியன் டாலர்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் 1933-ம் ஆண்டு உருவான காலம்தொட்டு இப்போதுதான் முதல் முறையாக அதன் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிரபல தகவல் சேவை நிறுவனமான விப்ரோ (இதன் சொத்து மதிப்பு ரூ.2.14 லட்சம் கோடி), உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே (இதன் மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி) மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஐஓசி ஆகியவற்றின் சந்தை மூலதனத்தை விட அதிகம்.

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான பத்தே கால் டன் தங்கம், 2.50 டன் தங்க நகைகள் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட்டுகள் இருக்கின்றன. நாடு முழுவதும் இந்தக் கோவிலுக்கு 960 சொத்துக்கள் உள்ளன. திருப்பதி கோவிலை விட அதிக சொத்து 2 டஜன் கம்பெனிகளுக்கு மட்டுமே இருக்கின்றன.

இவற்றில் முக்கியமானவை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.17.53 லட்சம் கோடி), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (ரூ.11.76 லட்சம் கோடி), எச்.டி.எப்.சி. வங்கி (ரூ.8.34 லட்சம் கோடி), இன்போசிஸ் ( ரூ.6.37 லட்சம் கோடி), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (ரூ.6.31 லட்சம் கோடி), இந்துஸ்தான் யூனிலிவர் (ரூ.5.92 லட்சம் கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ.5.29 லட்சம் கோடி), பார்திஏர்டெல் ( ரூ.4.54 லட்சம் கோடி), ஐ.டி.சி. (ரூ.4.38 லட்சம் கோடி) ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து