எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தின் மூலம் எலான் மஸ்க் தன்னையும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற கனவுடன் உள்ளார் பிரேசிலை சேர்ந்த ஒருவர்.
உலகின் செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க்கால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர், அவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக் கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தின் மூலம் எலான் மஸ்க் தன்னையும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற கனவுடன் அந்த இளைஞர் இத்தகைய செயலைச் செய்துள்ளார்.
பிரேசிலை சேர்ந்தவர் ரோட்ரிகோ. உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க்கால் இவர் அதிகம் கவரப்பட்டுள்ளார். இதனால், எலான் மஸ்க்கின் பெயரை அவரின் கனவுத் திட்டமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுடன் சேர்த்து நெற்றியில் பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பாக இளைஞர் ரோட்ரிகோ கூறும் போது,
எலான் மஸ்க் எனக்கானவர். அவர் மீதான என் அன்பை விவரிக்க முடியாது. அவர் என்ன செய்தாரோ, என்ன செய்ய இருக்கிறாரோ, அவை அனைத்தும் மக்களுக்கானது. அவர் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளார். இதன் மூலம் அவரின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும். அவர் எனக்கு மிகப்பெரிய உத்வேகம். அவருடன் சேர்ந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் ராக்கெட்டில் 2024-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு வரை ரோட்ரிகோ பிரேசிலில் சிறைத் துறை அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


