முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த நாளில் பெற்றோரிடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
CM-1 2022-11-27

Source: provided

சென்னை : தனது பிறந்த நாளையொட்டி தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் காலை தொட்டு ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். 

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை நேற்று  கொண்டாடினார்.

இதையொட்டி நேற்று காலையில் எழுந்ததும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் காலை தொட்டு ஆசி பெற்றார். 

அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு பட்டு வேஷ்டியை சால்வையாக அணிவித்தார். பின்னர் உதயநிதியின் தோளை தட்டிக் கொடுத்து உச்சி முகர்ந்தார். அதன் பிறகு உதயநிதியின் தோளில் கைபோட்டு அருகே அரவணைத்து வாழ்த்தினார்.

அப்போது அருகில் தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்த உறவினர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து