முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் மிக தீவிரமான பிரச்சினை: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      இந்தியா
jagdeepdhankhar-2022-12-03

தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற எல்.எம். சிங்வி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப்  தன்கர் பேசியதாவது,

இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பில் நாம் இந்தியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. பாராளுமன்றம் மக்களின் தேர்வு மற்றும் மக்களின் ஞானத்தைக் குறிக்கிறது. அதாவது அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது. மக்களவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்த போது ஒருவர் மட்டுமே வாக்கெடுப்பை தவிர்த்தார். மற்ற அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்றினர். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகிற்கு புதிது. எனினும், இது தொடர்பாக எவ்வித ரகசிய பேச்சையும் பாராளுமன்றம் பேசவில்லை. உண்மையில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து