முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண நிகழ்ச்சியின் போது விபரீதம்: கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      இந்தியா
Gas-cylinder 2022 12 -09

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியின் போது கியாஸ் சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாயினர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள புங்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண விருந்துக்காக சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தன. இதில் திருமணம் நடந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

சிலிண்டர்கள் வெடித்ததில் ரத்தன்சிங் என்ற 5 வயது சிறுவனும், குஷ்பு என்ற 4 வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர். 

சிலருக்கு 80 முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கியாஸ் சிலிண்டர்களால் ஏற்பட்ட கசிவு காாரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குப்தா கூறும் போது, இது மிகவும் மோசமான விபத்து. காயமடைந்த 50 பேரில் 42 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சரும் ஜோத்பூர் தொகுதி எம்.பி.யுமான கஜேந்திரசிங் செகாவத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து