முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுண்டமணி நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      சினிமா
Goundamani 2023 01 21

Source: provided

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்கும்  இரண்டாவது படம் " பழனிச்சாமி வாத்தியார் " இந்த படத்தில் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ்குமார், நந்தகோபால்,  R.K. சுரேஷ், மதுரை டாக்டர் சரவணன்,  மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார்  ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். யோகா டீச்சராக சஞ்சனா சிங் நடிக்கிறார்.  wide angle   ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்ய,  வைரமுத்து வரிகளுக்கு கே  இசையமைக்கிறார். அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார். கதை, திரைக்கதை, வசனம்  எழுதி இயக்குகிறார் - திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன். இந்நிலையில் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து