முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு நாள் விழா: ஒடிசா புடவையில் திரெளபதி முர்மு..! ராஜஸ்தான் தலைப்பாகையுடன் மோடி

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      இந்தியா
Murmu-Modi2023 01 26

குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒடிசா புடவையணிந்து பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி வண்ண நிறங்களுடைய ராஜஸ்தான் தலைப்பாகை (டர்பன்) அணிந்து விழாவில் பங்கேற்றார்.  குடியரசு நாள் விழாவில் கருப்பு வெள்ளை உடையணிந்த பிரதமர் மோடி, பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிறங்கள் உள்ளடங்கிய தலைப்பாகை அணிந்து பங்கேற்றார். 

நாட்டின் 74வது குடியரசு நாள் ஒன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் ஜனாதிபதி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டு குடியரசு மற்றும் சுதந்திர தின விழாக்களில் தேசியக்கொடியேற்றுபவர்களின் உடைகள் சிறப்பு கவனம் பெறும். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியேற்றி உரையாற்றும்போது அவர் அணிந்து வரும ஆடைகள் பேசுபொருளாவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டு குடியரசுநாளையொட்டி தேசியக்கொடியேற்றிய ஜனாதிபதி திரெளபதி முர்மு, கோயில் பார்டர் வைத்த ஒடிசா புடவை அணிந்து வந்துள்ளார்.  இதேபோன்று, பிரதமர் நரேந்திர மோடி கருப்பு, வெள்ளை உடை அணிந்து வந்துள்ளார். மேலும், பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிறங்கள் உள்ளடங்கிய ராஜஸ்தான் தலைப்பாகை அணிந்து பங்கேற்றுள்ளார்.  கடந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், ஆடை மற்றும் தொப்பி அணிந்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து