எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பிசிசிஐ சார்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது. இதில் பங்கேற்று ஆட பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் தீவிர ஆர்வம் காண்பிக்கின்றனர். முதன்முதலாக மகளிர் ப்ரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீர்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். கடந்த 2008-இல் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.
டபிள்யூபிஎல் அணிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. மும்பையில் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 2023 டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. ஆமதாபாத் அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத் நகரை முன்னிலைப்படுத்தும் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants) என அழைக்கப்படவுள்ளதாக அதானி ஸ்போர்ட்ஸ்லைன் நிறுவனம் அறிவித்துள்ளது.
____________
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிக்கு
ரைபகினா, சபலெங்கா தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர். இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ரைபகினா.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
________________
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்:
தமிழ்நாடு அணி 133 ரன்கள்
தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று தொடங்கியது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார். தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள். காயத்திலிருந்து மீண்டு வந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் ஜடேஜா, 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். யுவ்ராஜ்சிங் 4, டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
3-ம் நாளான நேற்று செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 6-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஜடேஜா, 15 ரன்களுக்கு அபரஜித் பந்தில் ஆட்டமிழந்தார். தமிழக அணியின் எம். சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்றது. தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸில் ஜடேஜாவின் சுழலில் 36.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
_________________
பாகிஸ்தான் கேப்டனுக்கு
ஐ.சி.சி.யின் இரு விருதுகள்
2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தேர்வாகியுள்ளார். மேலும், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.2022-ம் வருடம் அனைத்து வகை போட்டிகளிலும் 2000 ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பாபர் ஆஸம். 44 ஆட்டங்களில் 2598 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 54.12. 2022-ல் மட்டும் 8 சதங்களும் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார்.
2021-ல் சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வான பாபர் ஆஸம், 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராகவும் ஐசிசியால் அறிவிக்கப்பட்டுள்ளார். 9 ஆட்டங்களில் 679 ரன்கள் எடுத்தார். இதனால் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் வருடம் முழுக்க சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால், 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராகவும் பாபர் ஆஸம் தேர்வாகியுள்ளார். இதையடுத்து சோபர்ஸ் கோப்பை அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
________________
ஐசிசி 2022-ம் ஆண்டுக்கான சிறந்த
டெஸ்ட் வீரராக பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ் 2022-ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் என அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 2022 -ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் 870 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 36.25 ஆகும். அவரது ஸ்டிரைக் ரேட் 71.21 ஆகும். அவர் கடந்த ஆண்டு இரண்டு சதங்களை விளாசியுள்ளார்.
அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடித்த 103 ரன்கள் சிறப்பானதாகும். அதே போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அந்த தொடர் முழுவதையும் சேர்த்து அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும், அவர் 2022-ஆம் ஆண்டு முழுவதிலும் டெஸ்ட் போட்டிகளில் வெறும் 26 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பென் ஸ்டோக்ஸ் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில


