முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      தமிழகம்
Chennai-University 2023 01

Source: provided

சென்னை : குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. தயாரித்துள்ள ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. 

2002-ம் ஆண்டு நடந்த குஜராத் இனப்படுகொலை குறித்து பி.பி.சி. நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து உள்ளது. இதனை உலகளவில் பி.பி.சி. வெளியிட்டு உள்ளது. கூகுள் இணையதளத்திலும் வெளியிட்டு உள்ளது. 

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் குஜராத் ஆவணப் படத்தை கல்லூரிகளில் வெளியிட்டு வருகிறார்கள். அதை தொடர்ந்து பி.பி.சி. தயாரித்த ஆவணப்படம் வெளியிட தடை செய்யப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் பொது இடங்கள், கல்லூரி வளாகம், வீதிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். 

தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திருவாரூர் மத்திய தமிழ் பல்கலைக் கழகத்தில் திரையிட்டனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியிலும் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநில கல்லூரி விடுதியிலும், பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, எம்.சி. ராஜா, கல்லூரி விடுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆவணப்படத்தை மாணவர்கள் வெளியிட முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. 

சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று பிற்பகல் பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இதற்கு பல்கலைக் கழகம் தடை விதித்து உள்ளது. ஆனாலும் பல்கலைக்கழக வளாகம் அல்லது சுவற்றில் ஆவணப் படத்தை வெளியிட முயற்சி செய்வதில் மாணவ அமைப்பினர் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து