முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா காலமானார்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      சினிமா
Jamuna 2023 01 27

Source: provided

ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். 

கர்நாடக மாநிலம் ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாசராவ் - கவுசல்யா தேவி தம்பதிக்கு மகளாக 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பிறந்தவர் ஜமுனா. இவர் சிறு வயதாக இருந்த போதே அவரது தந்தை ஆந்திர மாநிலம் தெனாலிக்கு அருகில் உள்ள துக்கிரலா என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். அதனால் பள்ளி நாட்களிலேயே பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார் ஜமுனா.

பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜமுனா, தமிழ், கன்னடம், மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 1953-ம் ஆண்டு வெளியான புட்டிலு என்ற தெலுங்கு படம் மூலமாக நடிகையான அறிமுகமானார். 

பின்னர் மிஸ்சியம்மா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் தங்கமலை ரகசியம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மருத நாட்டு வீரன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, மனிதன் மாறவில்லை, தூங்காதே தம்பி தூங்காதே, பூமி கல்யாணம், மிஸ்ஸம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

1980-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த ஜமுனா ராஜமுந்திரி மக்களவை தொகுதியில் 1989-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1990-களில் பா.ஜ.க.வில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து