முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி உலகக் கோப்பை தோல்வி: இந்திய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் உள்பட 3 பேர் விலகல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      விளையாட்டு
Graham 2023 01 30

Source: provided

சென்னை : நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது. அணியின் இந்த தோல்விக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட் விலகி உள்ளார். உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

ஜெர்மனி பட்டம்...

இந்திய அணியின் அனலிட்டிக்கல் பயிற்சியாளர் கிரெக் கிளார்க் மற்றும் ஆலோசகர் மிட்செல் டேவிட் பெம்பர்டன் ஆகியோரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளனர். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற இந்த தொடரில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. குரூப் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியான கிராஸ்ஓவர் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. 

கிரஹாம் டைம்லைன்...

 08, ஏப்ரல் 2019: முன்னாள் ஆஸ்திரேலிய ஹாக்கி வீரரான கிரஹாம் ரீட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 05, ஆகஸ்ட் 2021: அவரது பயிற்சியின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது. 1980-க்கு பிறகு இந்திய ஹாக்கி அணி வென்ற ஒலிம்பிக் பதக்கம் இது. 19, ஜூன் 2022: ஹாக்கி புரோ லீக் தொடரில் இந்திய அணி மூன்றாம் இடம் பிடித்தது.08, ஆகஸ்ட் 2022: காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி வெள்ளி வென்றது.28, ஜனவரி 2023: ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணி 9-வது இடம் பிடித்தது.

பாக்கியமாக கருதுகிறேன்...

30, ஜனவரி 2023: தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரீட் விலகல். “எனது பொறுப்பை அடுத்து வரும் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என கருதுகிறேன். இந்திய அணி மற்றும் ஹாக்கி இந்தியாவுடனான இணைந்து பணியாற்றியதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்வுடன் அனுபவித்தேன். அணிக்கு எனது வாழ்த்துகள்” என ரீட் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து