எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக ஒத்துழைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி “எங்கள் தலைநகரான விசாகப்பட்டினத்திற்கு உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன். ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் வைசாக் நகருக்கு குடியேறுகிறேன்" என்று கூறினார்.
ஏற்கெனவே ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகராக்குவது பற்றி கூறியிருந்தார். மாநிலத் தலைமையகமாக விசாகப்பட்டினம் செயல்படும். அது ஆளுநரின் தலமாகவும் இருக்கும். ஆனால், சட்டப்பேரவை அமராவதியிலிருந்து இயங்கும். உயர் நீதிமன்றம் கர்னூலுக்கு மாற்றப்படும் என்று கூறியிருந்தார்.
1956-ல் ஆந்திரா மெட்ராஸில் இருந்து பிரிக்கப்பட்டபோது கர்னூல்தான் அதன் தலைநகராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தை ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அவர் நேற்று (ஜன.31) அறிவித்திருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


