முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகரெட் விலை உயர்கிறது

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Cigarette 2023 02 01

Source: provided

புதுடெல்லி : சிகரெட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், புகையிலை பொருள்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தார். செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக அதன் உதிரிபாக இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதேபோல் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது. கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. கூடுதல் வரி விதிப்பு காரணமாக சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை உயர்கிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால் வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து