முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கோரி முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Stalin- 20221 02 02

Source: provided

சென்னை: கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமியிடம் அவரது ஆசையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார்.  

இந்த நிலையில், முதல்வர்  மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வை முடித்து விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4-ம் வகுப்பு மாணவி, முதல்வரிடம் பேனா ஒன்றை கொடுத்துள்ளார். 

அப்போது அந்த மாணவியை வாகனத்தின் அருகே அழைத்து பேனாவை வாங்கிய முதல்வர், அந்த மாணவியை வாழ்த்தி எதற்காக இந்த பேனா எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி இந்த பேனாவை கலைஞர் சமாதியில் வைக்க வேண்டும் என தனது ஆசையை கூறினார். 

இதனைக் கேட்ட முதல்வர், சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் எனக் கூறி அனுப்பி வைத்தார். இது குறித்து சிறுமி கூறுகையில், 

முதல்வரை பார்த்தது எனக்கு மிகவும் மகிச்சியாக இருந்தது. என்னை நன்றாக படிக்கச் சொன்னார். நான் முதல்வரை பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து