எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : கூட்டணி பற்றி மாநில தலைவர்கள் முடிவு செய்ய முடியாது. தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்று எச்.ராஜா கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளரும், மூத்த நிர்வாகியுமான எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சமீபத்தில் அரங்கத்திற்குள் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் மாநில தலைவர் அவ்வாறு பேசினார், இவ்வாறு பேசினார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கிறது. அதனை பொருட்படுத்த வேண்டாம். அவை முறையாக கூறப்பட்ட தகவல் அல்ல. அவர்கள் சொன்னதாக கசிந்த வார்த்தைகள்.
கூட்டணி தொடர்பாக நாங்கள் மையக் குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்களே முடிவு செய்து அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை.
கூட்டணி குறித்து உறுதியான முடிவுகள் அறிவிக்கும் வரை பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பொது வெளியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.
சமீபத்தில் நான் டெல்லிக்கு செல்ல கோவை விமான நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரை பார்த்து பேசினேன். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் அது மத்தியில் இருக்கும் பா.ஜ.க.தான் முடிவு செய்யும். இது மாநிலத்தில் உள்ள தலைவர்களோ, நிர்வாகிகள் குழுவோ முடிவு செய்ய முடியாது. எங்கள் கருத்துக்களை மத்திய குழுவிடம் சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


