முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணி ராம்பால் பெயரில் புதிய ஹாக்கி மைதானம்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2023      விளையாட்டு
Rani-Rampal 2023 03 21

Source: provided

இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ராம்பால் பெயர் ஹாக்கி மைதானம் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வித கவுரவத்தை பெற்றுள்ள முதல் வீராங்கனையாகியுள்ளார் அவர். உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் அமைந்துள்ள MCF ரேபரேலி மைதானம்தான் இப்போது அவரது பெயரில் மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றிருந்தார்.

“ஹாக்கி விளையாட்டில் எனது பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் MCF ரேபரேலி ஹாக்கி மைதானத்தை ‘ராணி'ஸ் கேர்ள்ஸ் ஹாக்கி டர்ஃப்’ என்று மறுபெயரிட்டதை நான் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உணர்வை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் போதவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

________________

சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்ல ரசிகர்களுக்கு இலவச சிற்றுந்து வசதி 

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இலவச சிற்றுந்து வசதியை இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இலவச சிற்றுந்து சேவை நாளை காலை 11:00 மணி முதல் போட்டி முடியும்வரை ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது . இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ இரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை இன்று காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும்வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.

________________

மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு பயிற்சி வழங்கினார் பொல்லார்ட்

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் இந்த ஆண்டுக்கான 16-வது சீசன் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொல்லார்ட் அணியுடன் இணைந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய வீடியோவை மும்பை அணி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் அணி வீரர்களுக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.

________________

ஒருநாள் உலககோப்பையை இந்தியா வெல்லும்: பிரெட் லீ 

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன. 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக்கோப்பை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்.,

இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான அணியாக உள்ளது. அந்த அணியில் அனுபவமும் இளமையும் கலந்துள்ளது. அதுமட்டும் இன்றி இந்திய மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சவாலான காரியம். இங்குள்ள மைதானங்கள் அனைத்தும் இந்திய அணிக்கு ரொம்பவே பழக்கப்பட்டவை என்பதனால் இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு என்று எந்தவித தயக்கமும் இன்றி பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

________________ 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்து வங்கதேச வீரர் சாதனை

அயர்லாந்து அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்காள தேசம் 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, முஷ்ஃபிகுர் ரஹிம் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்தது. டெத் ஓவர்களில் காட்டடி அடித்து 60 பந்தில் சதமடித்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார். இந்த போட்டி மழை காரணமாக முடிவு இல்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து