Idhayam Matrimony

தோல்வியை மறந்து விடக்கூடாது: ரோகித் சர்மா - டிராவிட்டுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      விளையாட்டு
23-Ram-53

Source: provided

மும்பை: தோல்வியை மறந்து விடக்கூடாது என்று ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

 பீல்டிங்கில் நெருக்கடி...

ஆஸ்திரேலியாவிடம் தோற்று சொந்த மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது தொடர்பாக முன்னாள் கேப்டனும் டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:- இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியா பீல்டிங்கில் கடும் நெருக்கடி கொடுத்தது. கோலி-ராகுல், ரோகித் சர்மா-சுப்மன்கில் ஆகியோர் பார்ட்னர்ஷிப்பை தவிர இந்தியாவால் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. இதுதான் தோல்விக்கு காரணமாகும்.

மறந்துவிடக்கூடாது...

270 முதல் 300 ரன் இலக்கு இருக்கும் போது 90 அல்லது 100 ரன் பார்ட்னர்ஷிப் அவசியமானது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் மிகவும் நன்றாக இருந்தது. இதுதான் இரு அணிகளுக்கான வித்தியாசமாகும். ஐ.பி.எல். போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் பிரிந்து விடுவார்கள். இதனால் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது.

எச்சரிக்கையாக இருக்க.. 

ஆஸ்திரேலியாவை உலக கோப்பையில் மீண்டும் சந்திக்க நேரிடும். அப்போது இதுபோன்று மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதால் கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து