முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டை தவறாக வழி நடத்தி விட்டேன்: மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      உலகம்
Boris-Johnson 2023 03 24

Source: provided

லண்டன் : நாட்டை தவறாக வழி நடத்தியற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். 

இங்கிலாந்தில் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்த போது, நவம்பர் 2020-ல் கொரோனா விதிமுறைகளை மீறி அரசு மற்றும் கன்சர்வேடிவ் கட்சி ஊழியர்களுக்கு கூட்டம் நடத்தி விருந்து அளித்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் பிரதமர் பதவியை இழக்க நேர்ந்தது.

இது தொடர்பான வழக்கை நாடாளுமன்ற பொதுசபை சிறப்புரிமை குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக போரிஸ் பாராளுமன்றத்தில் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார். அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், இது தொடர்பாக போரிஸ் ஜான்சனிடம் சிறப்புரிமை குழு மீண்டும் விசாரணை நடத்தியது. அப்போது அவர், இரண்டு மூத்த அதிகாரிகள் விலகுவதாக கூறினர்.

இதனால், கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நாட்டை கவனக்குறைவாக, தவறாக வழி நடத்தியதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து