முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் கல்வி ஆவணங்களை கேட்ட விவகாரம்: டெல்லி முதல்வருக்கு 25,000 ரூபாய் அபராதம் : குஜராத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2023      இந்தியா
Kejriwal 20221 01 02

Source: provided

காந்திநகர் : பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.

பிரதமர் மோடியின் சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகத்தின் சார்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.  

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குஜராத் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயகத்தில் குறிப்பாக பிரதமர் பதவியில் இருப்போர், முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், எழுதப்படிக்க தெரியாமல் இருந்தாலும் எவ்வித வித்தியாசத்தை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் இந்த விவகாரத்தி எவ்வித பொதுநலனும் அடங்கியிருக்கவில்லை என வாதிட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  கூறுகையில்; வேட்பாளர் படிவத்தில் கல்வி தகுதியை பிரதமர் பூர்த்தி செய்துள்ளார். பட்டப்படிப்பு சான்றிதழை மட்டுமே தான் கேட்டுள்ளோமே தவிர மதிப்பெண் பட்டியலில் கேட்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த குஜராத் நீதிமன்றம், இந்த மனு மீதான தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தகத்து. இந்நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை குஜராத் நீதிமன்றம் நேற்று கூறியபோது, பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டுமென்ற குஜராத் பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் கடந்த 2014ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் எனவும் சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை 4 வாரத்திற்குள் குஜராத் மாநில சட்ட பணிகள் சேவை ஆணையத்திடம் செலுத்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உரிமை இல்லையா? 

இந்த தீர்ப்பை அடுத்து இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ''பிரதமரின் பட்டப் படிப்பைத் தெரிந்துகொள்ளக்கூட ஒரு நாட்டுக்கு உரிமை இல்லையா? சான்றிதழ் நகலைக் காட்ட நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பை தெரிவிப்பது ஏன் ? அவரது பட்டப்படிப்பு சான்றிதழ் நகலைப் பார்ப்பது தவறா? என்ன நடந்து கொண்டிருக்கிறது? படிப்பறிவு இல்லாத அல்லது குறைவான படிப்பறிவு கொண்ட ஒரு பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து