முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை போட்டி: ஆஸி., பிரதமருக்கு அழைப்பு

புதன்கிழமை, 24 மே 2023      விளையாட்டு
Modi-Anthony-1 2023-05-24

Source: provided

10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இது தொடர்பாக சிட்னியில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன். அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம். இவ்வாறு மோடி கூறினார்.

________________

16-வது ஓவருக்கு முன்பு சி.எஸ்.கே. ஆட்டத்தை நிறுத்த காரணம் என்ன?

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 16-வது ஓவரை வீசுவதற்கு முன்னர் ஆட்டத்தை சில நிமிடங்கள் நிறுத்தியது. அந்த சமயத்தில் கேப்டன் டோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் கள நடுவர்களுடன் கலந்து பேசி இருந்தனர். அப்போது கடைசி 5 ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சஹார், மஹீஷ் தீக்சனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது 4 ஓவர்களை முழுவதுமாக வீசி இருந்தனர். பதிரனாவுக்கு 3 ஓவர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவுக்கு 2 ஓவர்கள் எஞ்சி இருந்தன.

அதனால் டோனி, 16-வது ஓவரை வீசும்படி பதிரனாவை அழைத்தார். ஆனால், கள நடுவர்கள் கிறிஸ் கஃபேனி மற்றும் அனில் சவுத்ரி அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனெனில், அதற்கு முன்னர் சுமார் 9 நிமிடங்கள் பதிரனா, களத்துக்கு வெளியில் இருந்ததாக தெரிகிறது. இது ஐபிஎல் ஆட்ட விதிகளில் அடங்கும். விதி எண் 24.2.3-ன் படி ஒரு வீரர் 8 நிமிடங்களுக்கு மேல் ஆட்டத்தின்போது களத்துக்கு வெளியில் இருந்தால் அவர் நேரடியாக போட்டியில் பந்து வீச முடியாது. அவர் வெளியில் இருந்த நேரத்தை களத்தில் மீண்டும் செலவிட்ட பிறகே பந்து வீச அனுமதிக்கப்படுவார்.

________________

ஜடேஜாவுக்கு தூதுவிடும் பெங்களூரு ரசிகர்கள்

‘டோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள்’, ‘உங்கள் கர்மா நிச்சயம் உங்களை தேடி வரும்’, ‘அவர்களுக்குத் தெரிகிறது... ஆனால், சில ரசிகர்களுக்கு அது தெரியவில்லை’ என தொடர்ச்சியாக நடப்பு சீசனில் சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் டுவீட் செய்துள்ளார். இதில் கடைசியாக அவர் செய்த ட்வீட், நேற்று குஜராத் அணியுடனான வெற்றிக்குப் பிறகு செய்தது. ஆட்டத்தில் Most Valuable Player என்ற விருதை அவர் பெற்றதும் இப்படிச் சொல்லி இருந்தார்.

இந்தச் சூழலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் ‘நம்ம வீட்டுக்கு வாங்க’ என சாலமன் பாப்பையா சொல்வது போல ‘ஆர்சிபி-க்கு வருக’ என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் ஜடேஜாவுக்கு சொல்லி வருகின்றனர். ‘அப்போ அடுத்த வருஷம் ஜட்டு (ஜடேஜா) ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார்’, ‘மீண்டும் சிஎஸ்கே vs ஜடேஜா. ஆர்சிபி-க்கு வாங்க ஜட்டு’, ‘ஆர்சிபி-க்கு வாங்க. சேர்ந்தே தோற்போம்’, ‘டோனியின் நிழலில் இருந்து டூப்ளசி, அஸ்வின் போல வெளியேறுங்கள்’, ‘ஆர்சிபி-க்கு வாங்க. ராஜாவை போல பாத்துக்குறோம்’ என சில டுவீட்கள் வலம் வருகின்றன. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாதியிலேயே விலகினார் ஜடேஜா. அதன் பிறகு அவர் சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. இருப்பினும் நடப்பு சீசனில் சென்னை அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து