முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 20-ம் தேதி அ.ம.மு.க. செயற்குழு கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      அரசியல்
TTV 2023 01 20

சென்னை, வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த அ.ம.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், வரும் 20-ம் தேதி, செவ்வாய்க் கிழமை, காலை 9.00 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும். 

அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து