முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர்களின் உதவி இல்லாமல் விமானங்களை நிறுத்த சென்னை விமான நிலையத்தில் நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
chennai-airport-2023-06-01

சென்னை, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தரைத்தள ஊழியர்கள் உதவி இல்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பதற்காக தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

சென்னை விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமான நிறுத்தும் மேடைகள் உள்ளது. தற்போது அதில் 95 மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. விமானங்கள் ஓடு பாதையில் இருந்து இணைப்பு சாலைக்கு வந்து பின்னர் நிற்க வேண்டியத்தில் விமானங்கள் வந்து நிற்கும்.

அப்போது தரைத்தள ஊழியர்கள் சிக்னல் கொடுத்து விமானங்கள் சரியான இடத்தில் நிற்க விமானிக்கு உதவி செய்வார். ஆனால், கடுமையான வானிலையில் போது விமானிகளால் தரைத்தள ஊழியர்களின் சிக்னல்களை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போவதால் விமானத்தை நிறுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. 

இதனை தவிர்க்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போல நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 50 கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நேற்று காலை முதல் அந்த கருவிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

டாக்சி பாதையில் இருந்து விமானங்கள் நிறுத்தும் மேடைக்கு வரும் வரை 60 மீட்டர் தூரத்தில் இருந்து இந்த கருவிகள் வழிகாட்டும். விமானங்கள் நேர்கோட்டில் இருந்து விலகி சென்றால் தரையில் உள்ள டிஜிட்டல் விளக்குகள் மூலம் வழிகாட்டு சரியான இடத்தில் நிற்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து