எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: இந்தியா மற்றும் நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரெயில் சேவையை இரு நாட்டு பிரதமர்களும் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதன்பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான சரக்கு ரெயில் போக்குவரத்து சேவையை தலைவர்கள் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதன்பின்பு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள், பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பிரசண்டா முன்னிலையில் நடைபெற்றன. இதுபற்றி பிரதமர் மோடி ஊடகங்களின் முன் பேசும்போது, போக்குவரத்து ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்திடப்பட்டு உள்ளன. மக்களின் இணைப்பை அதிகரிக்க புதிய ரெயில் வழிகளை நாம் நிறுவியுள்ளோம்.
இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகால மின்சார வர்த்தக ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது நமது நாடுகளின் மின்சார பிரிவுகளுக்கு வலிமை தரும். இரு நாடுகள் இடையேயான மதம் மற்றும் கலாசார உறவுகள் மிக பழமையானது மற்றும் வலிமையானது. இதனை இன்னும் வலுப்படுத்தும் வகையில், ராமாயண பாதை தொடர்புடைய திட்டங்களை விரைவுப்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என பேசியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


