முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தின் போது மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்பு பிரசாரத்தில் எதுவும் ஈடுபடவில்லை: டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா      விளையாட்டு
Wrestler 2023-06-02

டெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண்டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடவில்லை என்று டெல்லி போலீஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு எதிராக வெறுப்பு பேச்சு புகார் மற்றும் பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்காக வழக்குப் பதிவு செய்யக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவிற்கு பதில் அளிக்கும் விதமாக அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தாக்கல் செய்தனர்.

போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையில்,"டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது மல்யுத்த வீராங்கனைகள் பிரதமர் மோடிக்கு எதிராக எழுப்பிய கோஷம், வெறுக்கத்தக்க பேச்சு வகையின் கீழ் வரக்கூடியது. இது அவர்கள் பிரதமரை கொலைசெய்யப் போவதாக மிரட்டியதைத் தெளிவாக உணர்த்தியது" என்று புகார்தாரர் தெரிவித்திருந்தார்.

புகார்தார் தனது புகாரில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆதாரமாக அவர் கொடுத்திருந்த வீடியோ காட்சிகளில் எந்த விதமான வெறுக்கத்தக்க முழக்கங்களும் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் மற்ற பிற மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் அதுபோன்ற எந்த விதமான முழக்கங்களையும் எழுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த மனுவினை தள்ளுபடிசெய்யவும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக வீராங்கனைகளுக்கு எதிராக அடல் ஜன் கட்சியின் தேசிய தலைவராக தன்னை கூறிக்கொள்ளும் பாம் பாம் மகாராஜ் நவுஹாதியா என்பவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை ஜூலை 7-ம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து