முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: தமிழகத்தில் பெருமாள் கோவில்களில் நீண்டவரிசையில் பக்தர்கள் தரிசனம்

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Srirangam 2023-09-23

Source: provided

சென்னை  புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று  தரிசனம் செய்தனர். 

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தமாதமாகும், இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் விரதமிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.  இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் நேற்று முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் கூட்டம் அலைமோதியது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்கள் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் காலை முதலே திருச்சி மற்றும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டணம் தரிசனம் மூலம் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இதே போல் நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி திருக்கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மதுரை தல்லாகுளம்  பெருமாள் கோவில்  உள்ளிட்ட கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து