முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2023      ஆன்மிகம்
Thiruchendur-Temple

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று மதியம் சண்முக விலாசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 

தொடர்ந்து மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு பால், தயிர் இளநீர் பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

4-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) மாலையில் கடற்கரையில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். 

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து