முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதாபாத் மைதானத்தில் பரபரப்பு:ஆடுகளத்துக்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2023      விளையாட்டு
07

Source: provided

அகமதாபாத்:நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட் செய்து வரும் நிலையில் களத்துக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.

அந்த நபர் அணிந்திருந்த மேலாடையில் ‘Free Palestine’ மற்றும் ‘Stop - Bombing Palestine’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு தனது பாலஸ்தீன கொடியை தனது முகக் கவசமாகவும் அவர் அணிந்திருந்தார். ஸாம்பா வீசிய 14-வது ஓவரின் போது அந்த நபர் களத்துக்குள் நுழைந்தார். அப்போது கோலி மற்றும் ராகுல் பேட் செய்தனர். அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கைது செய்து வெளியேற்றினர்.

கடந்த 40+ நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி வருகிறது. பல்வேறு உலக நாடுகள் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் உலகக் கோப்பை அரங்கில் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த வேண்டும் என்ற முழக்கம் ஒலித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் அடைக்கலம் தேடி பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து