முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் இன்று தி.மு.க. மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி: அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      தமிழகம்      அரசியல்
Udayanidhi-1 2023-10-15

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் இன்று தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 2,500 பேருக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி வழங்குகிறார். 

தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் உள்ள மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை கவுரப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்ட மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் , தமிழக அமைச்சருமான உதயநிதி கலந்து கொண்டு 2,500 மூத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி கவுரவிக்கிறார். இதே போல கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து பெருந்துறை சிப்காட் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

அமைச்சர் உதயநிதியின் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அமைச்சர் உதயநிதி மதியம் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து