எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களின் முதல் தேர்வு, தமிழகம். மாநிலத்தில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான் இதற்கு முக்கியமான காரணம். சிப்காட், சிட்கோ மற்றும் பொது - தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில்கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
முதலீட்டாளர்களின் முதல் தேர்வு, தமிழகம். மாநிலத்தில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான் இதற்கு முக்கியமான காரணம். இங்கே பிசினஸ் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதும், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழகம் எப்படித் திகழ்கின்றது என்பதற்கும் இது கண்கூடான சாட்சி. வளர்ச்சித் திட்டங்கள் என்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தோல் மற்றும் காலணித் துறைகளை பொறுத்தவரைக்கும், இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ நான் வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தத் துறையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
இதுமாதிரியான வளர்ச்சியை பார்க்கும்போது, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது. இந்தத் துறையில், நம்முடைய தமிழகத்தின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தவேண்டும். இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திடவேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட், சிட்கோ மற்றும் பொது - தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில்கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில், இவ்வளவு சிறப்பான திட்டத்துக்கான திறப்பு விழா நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இன்றைக்கு, முதற்கட்டமாக, 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த JR One கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028-ம் ஆண்டுக்குள், கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உங்களைப் போன்ற நிறுவனங்களோடு சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர இருக்கிறார்கள்.
உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெறவும், உங்களுடைய திட்டங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற்றிடவும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் தொழில் மேலும் சிறப்படைய அனைத்து உதவிகளையும் இந்த அரசு உறுதியாக செய்யும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
டெல்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: 5 பேர் பலி
12 Jul 2025புதுடில்லி, டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சீனா செல்கிறார் ஜெய்சங்கர்
12 Jul 2025புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாதது ஏன் ? - பும்ரா விளக்கம்
12 Jul 2025லண்டன் : முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாததற்கான காரணம் குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
-
லாா்ட்ஸ் டெஸ்ட்: கே.எல்.ராகுல் சதம்
12 Jul 2025லண்டன் : லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பும்ரா 5 விக்கெட்...
-
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்
12 Jul 2025லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
12 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து
13 Jul 2025திருவள்ளூர் : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை..!
13 Jul 2025திண்டுக்கல் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வார விடுமுறை தினத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.