முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரருக்கான பயிற்சியா...? - நாசா தலைவர் பதில்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      உலகம்
MODI 2023 06 16

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரருக்கான பயிற்சியா என்ற கேள்விக்கு நாசா தலைவர் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். பல நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்து செல்ல, இந்திய விண்வெளி வீரர் ஒருவருக்கு அடுத்த ஆண்டு இறுதியில் நாசா பயிற்சி அளிக்கும்.

அந்த இந்திய விண்வெளி வீரராக பிரதமர் மோடி இருப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த நாசாவின் தலைவர் நெல்சன் கூறும்போது, விண்வெளிக்கு பறந்து செல்வது என்பது எந்த அரசியல்வாதிக்கும் ஒரு மதிப்பான அனுபவம் ஆக இருக்கும். அதிலும் நாட்டின் தலைவருக்கு இன்னும் அதிகளவில் இருக்கும். விண்வெளியில், அரசியல், மதம் அல்லது இனம் சார்ந்த எல்லைகள் என எதுவும் கிடையாது. பூமியில் உள்ள ஒரு குடிமகன் என்ற அளவிலேயே அது இருக்கும். பிரதமர் மோடி, விண்வெளி பற்றிய அறிவும், ஆர்வமும் கொண்டவர் என கூறியுள்ளார்.

ஆர்டெமிஸ் திட்டத்தின்கீழ், நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்பும் திட்டத்தில் நாசா உள்ளது. இதன்படி, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் நாசா தயாராகி வருகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்பது பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து