எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பூர் 'நோய்களுக்கு சிகிச்சை பெறும் சபரிமலை பக்தர்கள், விரதம் துவங்கிய பிறகும், மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். சபரிமலை செல்லும் போது சிகிச்சை பதிவுகள் மற்றும் மருந்துகளையும் உடன் எடுத்து வர வேண்டும்' என, மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அய்யப்ப பக்தர்களுக்காக, அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் தலைமை அரசு மருத்துவமனைகளில், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது., கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தை மையப் பகுதியாக கொண்டு, சபரிமலை பக்தர்களுக்கு சிகிச்சை வசதி மற்றும் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலும் போதுமான மருத்துவ மையங்கள் உள்ளன. சபரிமலையில் நிலக்கல், பம்பை, அப்பாச்சி மேடு, நீலிமலை, சரல்மேடு, சன்னிதானம் ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் உள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக மலையேற்ற பாதையில் பல இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் உள்ளன.
இங்கும் முதலுதவி, ரத்த அழுத்த பரிசோதனை, ஆக்சிஜன் வழங்கும் வசதிகள், இதயத் துடிப்பை சீர்படுத்தும் கருவியான 'டிபிரில்லேட்டர்' தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் யாத்ரீகர்கள் விரதம் தொடங்கிய பிறகும் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். சிகிச்சை பதிவுகள் மற்றும் மருந்துகளையும் உடன் கொண்டு வர வேண்டும். மலையேற்றத்தின் போது யாத்ரீகர்களுக்கு நெஞ்சுவலி அல்லது அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


